

சென்னை,
திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ரிசர்வ் வங்கியின் கால அவகாசம் அளிக்கும் உத்தரவினை மீறி சில வங்கிகள் கடன் தவணைத் தொகையைத் திருப்பிச் செலுத்த மிரட்டி வருவதாக கூறியுள்ளார். இதனால் விவசாயி ராஜாமணியின் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக கூறிய ஸ்டாலின், அவர் உயிரிழப்பிற்கு காரணமான வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
கடன் வசூல் செய்யும் முகவர் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்து உடனடியாக அவர்களைக் கைது செய்ய வேண்டும் என்று அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார். ரிசர்வ் வங்கியின் உத்தரவை மீறிக் கடன் தவணையை வசூலிக்கும் வங்கிகளின் லைசென்சை மத்திய அரசு ரத்து செய்ய எடுக்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.