கொலை வழக்கு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை: போலீசாருக்கு தூத்துக்குடி எஸ்.பி. பாராட்டு

தூத்துக்குடியில் கொலை வழக்கு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
பாராட்டு
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி முத்தையாபுரம் காவல் நிலைய கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் 1.6.2026 அன்று தீர்ப்பு வழங்கியது.

போலீசாருக்கு எஸ்.பி. பாராட்டு:

மேற்சொன்ன வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தந்து சிறப்பாக பணிபுரிந்த முத்தையாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் மற்றும் நீதிமன்ற தலைமை காவலர் சிவநேசமாணிக்கம் ஆகியோரை தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. அபிஷேக் குப்தா நேற்று நேரில் அழைத்து நற்பணி சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com