திருச்செந்தூரில் போக்சோ வழக்கு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

காயல்பட்டினத்தைச் சேர்ந்த ஒருவர் திருச்செந்தூர் பகுதியில் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார்.
திருச்செந்தூரில் போக்சோ வழக்கு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
Published on

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2017ம் ஆண்டு 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் காயல்பட்டினம் பகுதியைச் சேர்ந்த குருபாதம் மகன் ஜெயசிங் (வயது 43) என்பவரை திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பிரீத்தா நேற்று (31.7.2025) குற்றவாளி ஜெயசிங் என்பவருக்கு ஆயுள் தண்டனை, ரூ.10,000 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சாந்தி, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுதர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் முத்துலட்சுமி, விசாரணைக்கு உதவியாக இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் லிங்ககனி ஆகியோரை தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் பாராட்டினார். 

X

Daily Thanthi
www.dailythanthi.com