கொலை வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை - பூந்தமல்லி கோர்ட்டு தீர்ப்பு

கொலை வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை வழங்கி பூந்தமல்லி கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
கொலை வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை - பூந்தமல்லி கோர்ட்டு தீர்ப்பு
Published on

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாண்டியன் (வயது 24). இவர், 2015-ம் ஆண்டு போரூரில் மவுண்ட்-பூந்தமல்லி சாலையில் உள்ள மதுக்கடையில் மதுபானம் வாங்க சென்றார். அப்போது அங்கு தனது நண்பருடன் நின்று கொண்டிருந்த உதயகுமார் என்ற கத்தி உதயகுமார் (33) என்பவர் பாண்டியனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதில் ஆத்திரமடைந்த உதயகுமார் அருகில் இருந்த கட்டையால் தாக்கியதில் பாண்டியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உதயகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு பூந்தமல்லியில் உள்ள கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் 2-ல் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி முருகேசன் நேற்று தீர்ப்பு வழங்கினார். இதில் உதயகுமார் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார். அபராதம் கட்டத்தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்கவும் நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அரசு தரப்பில் வக்கீல் புரட்சிதாசன் ஆஜராகி வாதாடினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com