திருச்சி மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி தப்பி ஓட்டம்: 2 பேர் பணியிடை நீக்கம்


திருச்சி மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி தப்பி ஓட்டம்: 2 பேர் பணியிடை நீக்கம்
x

திருச்சி மத்திய சிறையில் 750-க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர்.

திருச்சி,

திருச்சி மத்திய சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என 750-க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். இவர்களில் சில கைதிகள் சிறை வளாகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் தோட்டம் மற்றும் பெட்ரோல் விற்பனை நிலைய பணிக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதி சேர்ந்த ராஜ்குமார் (வயது 27) என்பவர் ஒரு குற்ற வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் ராஜ்குமார் மற்றும் கைதிகள் சிலர் மத்திய சிறை வளாகத்தில் உள்ள கோழி பண்ணையில் வேலை செய்வதற்காக ஈடுபடுத்தப்பட்டனர். இந்த சமயத்தில் ராஜ்குமார் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதை சிறைகாவலர்கள் யாரும் கவனிக்கவில்லை. இதைத்தொடர்ந்து கைதிகளை கணக்கெடுக்கும் போது, ராஜ்குமார் தப்பி ஓடியது தெரியவந்தது.

இது பற்றி சிறைதுறை போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தப்பி ஓடிய கைதி ராஜ்குமாரை பிடிக்க5 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் அவர் சொந்த ஊர் சென்றாரா? அல்லது வேறு எங்காவது சென்றாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பாதுகாப்பு பணியில் இருந்த சிறை காவலர்கள் பிரசாத், சுதாகர் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.

1 More update

Next Story