சென்னையில் அதிகாலை லேசான மழை... வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது

சென்னையின் பல்வேறு இடங்களில் இன்று அதிகாலை லேசான மழை பெய்தது.
சென்னையில் அதிகாலை லேசான மழை... வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது
Published on

சென்னை,

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் தாங்க முடியாத அளவுக்கு இருந்து வருகிறது. அதிலும் வட உள் மாவட்டங்களில் வீசும் வெப்ப அலையால், அந்த மாவட்டங்களில் வெப்பம் சுட்டெரித்து வருவதை பார்க்க முடிகிறது. இது ஒரு புறம் இருக்க வெயிலுக்கு இதமாக, கடந்த 2 தினங்களாக தமிழ்நாட்டில் சில இடங்களில் மிதமான முதல் கனமழை பெய்து வருகிறது.

அந்தவகையில் சென்னையில் இன்று அதிகாலை பல்வேறு இடங்களில் குளிர்ந்த காற்றுடன் லேசான மழை பெய்தது. சென்னை சென்டிரல், எழும்பூர், புரசைவாக்கம், கிண்டி, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், சைதாப்பேட்டை, ஆலந்தூர், மீனம்பாக்கம், குரோம்பேட்டை, பல்லாவரம், அசோக் நகர், அடையாறு, மயிலாப்பூர், வடபழனி, தாம்பரம், வண்ணாரப்பேட்டை, ஆயிரம் விளக்கு, நந்தனம் உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்தது.

சென்னையில் கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், அதிகாலையில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com