வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு - மக்கள் நீதி மய்யம் வரவேற்பு

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பது கள்ள ஓட்டுகளை தடுக்க உதவும் என மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது.
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு - மக்கள் நீதி மய்யம் வரவேற்பு
Published on

சென்னை,

மக்கள் நீதி மய்யம் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- "வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்கும் சட்டத்திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ள நிலையில், தமிழகத்தில் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் வாக்காளர் அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்கும் பணிகளைத் தொடங்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதை மநீம வரவேற்கிறது. இந்நடவடிக்கையானது போலி வாக்காளர்களை நீக்குவதற்கு உதவும், கள்ள ஓட்டுகளை தடுக்கும்.

அதே சமயத்தில் வாக்காளரை வற்புறுத்தி ஆதார் எண்ணைப் பெறக்கூடாது. முழு சம்மதத்துடன் பெற வேண்டுமெனவும் இச்சட்டத்திருத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளை முறையாகப் பின்பற்றப்படும் என்பதை தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்த வேண்டும்.

ஜனநாயகத்தில் அடிநாதமான "நேர்மையான தேர்தலுக்கு" இதுபோன்ற தேர்தல் சீர்திருத்தங்கள் அவசியமானது. மத்திய, மாநில அரசுகள் இதுகுறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம். மக்கள் நீதி மய்யம் அப்பணியை தொடர்ந்து செய்யும்". இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com