சிங்கப்பெண் அதிரடிப்படைக்கு சென்னையில் தலைமை அலுவலகம்

ஐ.ஜி. பவானீஸ்வரி தலைமையில் சிங்கப்பெண் அதிரடிப் படை உருவாக்கப்பட்டது.
சிங்கப்பெண் அதிரடிப்படைக்கு சென்னையில் தலைமை அலுவலகம்
Published on

சென்னை,

தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக விஜய் பதவியேற்றபோது, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உருவாக்கப்படும் என்ற கோப்பில் கையெழுத்திட்டார். இதைத்தொடர்ந்து ஐ.ஜி. பவானீஸ்வரி தலைமையில் இந்த படை பிரிவு உருவாக்கப்பட்டது.

கடந்த மாதம் 9-ந்தேதி இந்த பிரிவை முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார். இந்த படைப்பிரிவு தொடங்கிய ஒரு மாதத்தில் மெச்சத்தகுந்த பணிகளையும், பல்வேறு அதிரடி நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில், சிங்கப்பெண் அதிரடிப்படை பிரிவு தொடங்கிய ஒரு மாதம் ஆகி உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட 120 பேர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

காணாமல் போன 36 குழந்தைகள் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 16 குழந்தை திருமணங்கள் தக்க நேரத்தில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படைக்கு என்று தனியாக கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டு பரபரப்பாக செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது.

1091 என்ற அவசர உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த எண்ணிற்கு ஒரு நாளைக்கு சுமார் 1500 க்கும் மேற்பட்ட அழைப்புகள் வருகின்றன சிங்கப்பெண் அதிரடி படைக்காக சென்னை அசோக் நகரில் தலைமை அலுவலகம் தொடங்கப்பட உள்ளது. மாநிலம் முழுவதும் செயல்படும் 70 சிங்கப்பெண் அதிரடிப்படைகளில் புதிதாக 2,545 பேர் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com