சிங்கப்பெண் அதிரடிப்படை காவலரின் நகை, பணம் மாயம் - போலீசார் விசாரணை

கிருபா, சென்னை கிண்டி ஆயுதப்படையில் போலீசாக பணியாற்றி வருகிறார்.
சிங்கப்பெண் அதிரடிப்படை காவலரின் நகை, பணம் மாயம் - போலீசார் விசாரணை
Published on

சென்னை,

சிங்கப்பெண் திட்ட துவக்க விழா அணிவகுப்பில் பங்கேற்க வந்த பெண் காவலரின் நகை, பணம் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர் கிருபா (25), சென்னை கிண்டி ஆயுதப்படையில் போலீசாக பணியாற்றி வருகிறார். இவர், தமிழக முதல்-அமைச்சர் தொடங்கி வைத்த சிங்கப்பெண் நிகழ்ச்சி அணிவகுப்பில் பங்கேற்க, கடந்த 9ம் தேதி ஆவடி சிறப்பு காவல் படை 2ம் அணி மைதானத்திற்கு வந்தார். சக போலீசான சண்முகப்பிரியா என்பவருடன் தங்கினார். பயிற்சி முடித்து, நிகழ்ச்சியில் பங்கேற்ற கிருபா சொந்த ஊருக்கு செல்ல தயாரானார்.

நகை மாயம்

அப்போது, சண்முகப்பிரியாவிடம் தனது பையை ராஜரத்தினம் ஸ்டேடியத்திற்கு கொண்டு வந்து போலீஸ் வாகனத்தில் வைக்குமாறு கூறினார். இதையடுத்து, சண்முகப்பிரியா பையை கொண்டு சென்று போலீஸ் வாகனத்தில் வைத்தார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது, கிருபாவின் பை மாயமானதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அந்த பையில் ஒன்றரை சவரன் நகை, ரூ.1500 இருந்துள்ளது. இதுகுறித்து துணை ஆணையர் அலுவலகத்தில் கிருபா புகார் தெரிவித்தார். ஆனால், காவல்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து, கிருபா ஆவடி போலீசாரிடம் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் விசாரிக்கின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com