ஏரியூர் அருகேகிராம மைய பகுதியில் சாராயம் காய்ச்சிய நபருக்கு வலைவீச்சுவீட்டுக்குள் நாட்டுத்துப்பாக்கி பறிமுதல்

ஏரியூர் அருகேகிராம மைய பகுதியில் சாராயம் காய்ச்சிய நபருக்கு வலைவீச்சுவீட்டுக்குள் நாட்டுத்துப்பாக்கி பறிமுதல்
Published on

ஏரியூர்:

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் ஒன்றியம் நாகமரை ஊராட்சி நெருப்பூர் கிராம மைய பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சாராயம் காய்ச்சுவதாக ஏரியூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து சாராயம் காய்ச்சிய வீட்டை போலீசார் சுற்றிவளைத்தனர். ஆனால் வீட்டில் சாராயம் காய்ச்சிய முருகேசன் (வயது 55) என்பவர் தப்பி ஓடிவிட்டார். அவரது வீட்டின் அருகே சோதனை செய்தபோது 5-க்கும் மேற்பட்ட இடங்களில் குழி வெட்டி பகல் நேரத்திலேயே சாராயம் காய்ச்சியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 30 லிட்டர் சாராய ஊறல், 15 லிட்டர் சாராயம் ஆகியவற்றை கைப்பற்றி அழித்தனர்.

இதனை தொடர்ந்து போலீசார் வீட்டுக்குள் சென்று சோதனை செய்தபோது அங்கு ஒரு நாட்டுத்துப்பாக்கி, நாட்டுத்துப்பாக்கி செய்ய தேவையான உபகரணங்கள் இருந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி சென்ற முருகேசனை வலைவீசி தேடி வருகின்றனர்.

இதற்கிடையே சாராயம் காய்ச்சிய இடத்தை பென்னாகரம் துணை போலீஸ் சூப்பிரண்டு இமயவரம்பர் நேரில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com