மே தினத்தில் மதுக்கடைகள் மூடல்:கலெக்டர் உத்தரவு

தேனி மாவட்டத்தில் வருகிற 1-ந்தேதி மே தினத்தன்று மதுக்கடைகள் மூடப்படும் என்று கலெக்டர் தெரிவித்தார்.
மே தினத்தில் மதுக்கடைகள் மூடல்:கலெக்டர் உத்தரவு
Published on

தமிழக அரசு வருகிற மே 1-ந்தேதி மே தினத்தையொட்டி அனைத்து மதுபான கடைகளையும் மூட வேண்டும் என்றும், அன்றைய தினத்தில் எவ்வித மதுவிற்பனையும் மேற்கொள்ளக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, வருகிற மே 1-ந்தேதி தேனி மாவட்டத்தில் அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகளும், தனியார் மதுபான கூடங்களும் கட்டாயம் மூடப்பட வேண்டும். மதுவிற்பனை எதுவும் நடக்கக்கூடாது. அன்றைய நாளில் விதிமீறல்கள் எதுவும் இருந்தால் சம்பந்தப்பட்ட மதுபான கடைகள் மற்றும் மதுபான பார் உரிமையாளர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த தகவல் தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com