கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சாராய வியாபாரி மீது தடுப்புக்காவல் சட்டம் பாய்ந்தது

கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சாராய வியாபாரி மீது தடுப்புக்காவல் சட்டம் பாய்ந்தது.
கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சாராய வியாபாரி மீது தடுப்புக்காவல் சட்டம் பாய்ந்தது
Published on

விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பேராவூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சண்முகம் மகன் கேசவன் (வயது 40). இவர் மீது கிளியனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாராயம் விற்பனை செய்ததாக பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த சில வாரத்திற்கு முன்பு சாராய வழக்கில் கேசவனை கிளியனூர் போலீசார் கைது செய்து கடலூர் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, இவர் சாராய வழக்குகளில் ஈடுபட்டு வந்ததால் இவருடைய செயல்களை தடுக்கும்பொருட்டு தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா பரிந்துரை செய்தார். அதன்பேரில் கேசவனை தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்யும்படி போலீஸ் சூப்பிரண்டுக்கு கலெக்டர் மோகன் உத்தரவிட்டார்.

இதையடுத்து கேசவனை தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் போலீசார் இன்று கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகல், கடலூர் சிறையில் இருக்கும். அவருக்கு சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com