சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது

சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது
Published on

அணைக்கட்டு தாலுகா வெள்ளைக்கல்மலையை சேர்ந்தவர் குப்பன் என்ற குப்புசாமி (வயது 38). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாராயம் விற்ற வழக்கில் வேலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசாரால் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

குப்புசாமி மீது சாராயம் விற்றது தொடர்பாக 5 வழக்குகள் இருப்பதால் குண்டர் சட்டத்தில் கைது செய்யும்படி வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், கலெக்டர் குமாரவேல்பாண்டியனுக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் குப்புசாமியை குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கு கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து அதற்கான ஆணையின் நகலை போலீசார் வேலூர் மத்திய ஜெயில் அலுவலர்களிடம் வழங்கினர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com