

சென்னை,
தமிழக அரசின் 'டாஸ்மாக்' கடைகளில் மதுபான விலை உயர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக அரசின் டாஸ்மாக் மதுக்கடைகளில், மது பாட்டில் விலை, அக்டோபர் முதல் வாரத்தில் இருந்து, 10 ரூபாய் உயர்த்தப்பட உள்ளது. தமிழகத்தில், சில்லரை கடைகள் வாயிலாக, மது வகைகள் விற்பனை செய்யும் பணியில், தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் மட்டுமே ஈடுபட்டுள்ளது. காலி மது பாட்டில்களை மறுசுழற்சி செய்வதில் ஏற்படும் பிரச்னைக்கு தீர்வு காண, மது பாட்டிலுக்கு, 20 ரூபாய்க்கு மிகாமல் சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலத்தீர்வையை அரசு விதிக்க உள்ளது. இதற்காக மதிப்பு கூட்டு வரி சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. அதன்படி, அடுத்த மாதம், முதல் வாரத்தில் இருந்து மது வகைகள் பாட்டிலுக்கு 10 ரூபாய் உயர்த்தப்பட உள்ளன.
மதுக்கடைகளில், மது பாட்டில் விற்கப்படும் போது அதிகபட்ச சில்லரை விலையுடன் சேர்த்து 10 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. காலி பாட்டிலை திரும்ப ஒப்படைத்ததும், அந்த 10 ரூபாய் திரும்ப வழங்கப்படும்.
புதிய தீர்வையால் 20 ரூபாய் வரை மது பாட்டில் விலையை உயர்த்தலாம். இருப்பினும், 10 ரூபாய் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வுக்கு பின், மது பாட்டில் விலையுடன், கூடுதல் பணம் வசூலிக்க வாய்ப்பு ஏற்படாது. மதுராந்தகம், திருப்பூர் இடைத்தேர்தல் முடிந்ததும், இந்த விலை உயர்வு அமல்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.