சாராயம் கடத்தியவர் கைது

சாராயம் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
சாராயம் கடத்தியவர் கைது
Published on

திருமருகல் அருகே ஆதினங்குடி பகுதியில் திட்டச்சேரி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக ஒரு மோட்டார் சைக்கிள் வந்தது. அந்த மோட்டார் சைக்கிளை சந்தேகத்தின்பேரில் மறித்து போலீசார் சோதனை நடத்தினர். சோதனையில் மோட்டார் சைக்கிளில் இருந்த மூட்டையில் 110 லிட்டர் சாராயம் இருந்தது. இதைத்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்தவரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் ஏனங்குடி சடகோபன்மூளை மாதா கோவில் தெருவை சேர்ந்த ஆரோக்கியசாமி மகன் அகஸ்டின் (வயது35) என்பதும் இவர் காரைக்கால் பகுதியில் இருந்து சாராயத்தை மோட்டார் சைக்கிளில் திருவாரூர் பகுதிக்கு கடத்தி சென்றதும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com