மது விற்றவர் கைது

கபிஸ்தலம் அருகே மது விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
மது விற்றவர் கைது
Published on

கபிஸ்தலம்:

கபிஸ்தலம் போலீசார் கபிஸ்தலம் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது திருவைக்காவூர் ஊராட்சி புது கண்டிப்படுகை பகுதியில் பிள்ளையார் கோவில் அருகில் ஒருவரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் புது கண்டிப்படுகை நடுத்தெருவை சேர்ந்த சக்கரவர்த்தி(வயது55) என்றும் அவர் மதுபாட்டில்களை விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சக்கரவர்த்தியை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 10 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com