மது விற்றவர் கைது

மது விற்றவரை போலீசா கைது செய்தனா.
மது விற்றவர் கைது
Published on

டி.என்.பாளையம்

டி.என்.பாளையம் அருகே உள்ள கொங்கர்பாளையம் பகுதியில் பங்களாப்புதூர் போலீசார் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு மதுபான பாட்டில்களுடன் நின்று கொண்டிருந்தவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர் கொங்கர்பாளையம் பழையூர் பகுதியை சேர்ந்த கிட்டான் (வயது55) என்பதும், அவர் சட்டவிரோதமாக மது பாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கிட்டானை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 7 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com