

நெல்லை மாநகர மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த சங்கரசுப்பு (வயது 23) என்பவர் சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாகவும், அவரிடம் விசாரிக்க சென்ற போலீசாரை பணி செய்ய விடாமல் அவதூறாக பேசி, மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து மதுவிலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, சங்கரசுப்புவை கைது செய்தனர். அவரிடம் இருந்து 21 மது பாட்டில்கள் மற்றும் ரூ.120 பறிமுதல் செய்யப்பட்டது.