சாராயம் விற்றவர் கைது

மணல்மேடு அருகே சாராயம் விற்றவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது
சாராயம் விற்றவர் கைது
Published on

மணல்மேடு:

மணல்மேடு பகுதியில் சாராயம் விற்பனை குறித்து மணல்மேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் மற்றும் போலீசார் காளி கிராமத்தில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது காளி கடைத்தெருவில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த மேல பனையூரை சேர்ந்த நாகராஜ் (வயது 66) என்பவரை பிடித்தனர். பின்னர் அவரிடமிருந்து 110 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் மணல்மேடு பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்பனை செய்பவர் குறித்து பொதுமக்கள் 9626169492 என்ற whatsapp என் மூலம் தகவல் தெரிவிக்கலாம் என்றும் தகவல் தெரிவிப்பவர்கள் விவரம் பாதுகாக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com