அய்யம்பேட்டையில் மதுக்கடை மூடல்

அய்யம்பேட்டையில் மதுக்கடை மூடப்பட்டது
அய்யம்பேட்டையில் மதுக்கடை மூடல்
Published on

தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் தமிழக சட்டசபையில் அறிவித்தபடி தமிழ்நாடு முழுவதும் 500 மது கடைகள் நேற்று முதல் மூடப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. தஞ்சை மாவட்டத்தில் 15 டாஸ்மாக் கடைகள் நிரந்தரமாக அடைக்கப்பட்டது. இதில் அய்யம்பேட்டை குறிஞ்சி நகரில் இயங்கி வந்த மதுபான கடையும் ஒன்றாகும். இந்த கடை மூடப்படும் செய்தி அறிந்தவுடன் இந்த பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதே சமயம் இந்த கடையின் தொடர் வாடிக்கை மதுபிரியர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். நேற்று இந்த கடை மூடப்படுவதை அறியாத வாடிக்கையாளர் பலரும் மதியம் வரை கடை திறக்கப்படாததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். சிறிது நேரத்தில் இந்த கடை நிரந்தரமாக மூடப்படுகிறது என்று அறிவிப்பு கதவில் ஒட்டப்பட்டது. இதையடுத்து அருகில் செயல்பட்டு வரும் மதுபான கடையில் நேற்று மதியம் முதல் மது பிரியர்கள் மதுபானங்களை வாங்கிச்சென்றனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com