

சிவகங்கை,
சிவகங்கையில் வருகிற 11-ந்தேதி தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது நினைவு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தில் இயங்கிவரும் எப்.எல்.1 (அரசு சில்லறை மதுபானக்கடைகள் மற்றும் மதுக்கூடங்கள்) எப்.எல்.2 (உரிமம் பெற்ற மனமகிழ் மன்றங்கள்), எப்.எல்.3 (ஓட்டல்களுடன் இணைந்த மதுக்கூடங்கள்) ஆகியவை 10-ந்தேதி (வியாழக்கிழமை) மதியம் 2 மணி முதல் 11-ந்தேதி (வெள்ளிக்கிழமை) வரை மட்டும் மூடப்பட்டிருக்கும். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தெரிவித்தார்.