31-ந் தேதி மதுக்கடைகளை மூட வேண்டும்: சேலம் கலெக்டர் உத்தரவு

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு மதுக்கடைகளை மூட வேண்டுமென கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
31-ந் தேதி மதுக்கடைகளை மூட வேண்டும்: சேலம் கலெக்டர் உத்தரவு
Published on

சேலம்,

”சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு வருகிற 31-ந் தேதி மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகள் மற்றும் பார்கள் மூட வேண்டும்.

மாவட்டத்தில் உரிமம் பெற்று ஓட்டல் மற்றும் கிளப்புகளில் இயங்கி வரும் பார்களும், டாஸ்மாக் கடைகளும், அதனுடன் இணைந்துள்ள பார்களும் மூடப்பட வேண்டும். இதனை மீறி விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.”

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com