

நாகூர்:
நாகூரை அடுத்த மேலவாஞ்சூர் சோதனை சாவடியில் நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது காரைக்காலில் இருந்து நாகையை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்த நபரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அவர் நாகை வடக்கு பொய்கைநல்லூர் வீரன் குடிகாடு பகுதியை சேர்ந்த குமார் (வயது 42) என்பதும், இவர் காரைக்காலில் இருந்து சாராயம் கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இது குறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து குமாரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 110 லிட்டர் சாராயத்தையும், கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.