சாராயம் கடத்தியவர் கைது

நாகூரில் சாராயம் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
சாராயம் கடத்தியவர் கைது
Published on

நாகூர்:

நாகூர் வெட்டாற்று பாலம் அருகில் நாகூர் போலீசார் வாகன சோதனை ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படி வகையில் நடந்து வந்த நபரை பிடித்து சோதனை செய்தனர். இதில் சாராயம் இருந்தது. பின்னர் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கீழ்வேளூரை அடுத்த ஆணைமங்கலத்தை சேர்ந்த வீரமணி (வயது 47) என்பதும், இவர் காரைக்கால் பகுதியில் இருந்து சாராயம் கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதுகுறித்த நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரமணியை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com