மொபட்டில் மது கடத்தியவர் கைது

மொபட்டில் மது கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
மொபட்டில் மது கடத்தியவர் கைது
Published on

விக்கிரமங்கலம்:

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் கீழநத்தம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மொபட்டை மறித்து சோதனை செய்தனர். அப்போது அதில் விற்பனை செய்வதற்காக 21 மது பாட்டில்களை கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், மொபட்டில் வந்தவரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர், கீழநத்தம் கிராமத்தை சேர்ந்த தேசிங்குராஜா(வயது 21) என்பது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com