சாராயம் விற்றவருக்கு வலைவீச்சு

சாராயம் விற்றவரை போலீசா வலைவீசி தேடி வருகின்றனா.
சாராயம் விற்றவருக்கு வலைவீச்சு
Published on

தியாகதுருகம், 

தியாகதுருகம் அருகே வரஞ்சரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் புக்கிரவாரி புதூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தனது வீட்டின் பின்புறம் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த கல்லுக்குட்டை பகுதியை சேர்ந்த பெரியதம்பி மகன் ராமலிங்கம் என்பவர் போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓடினார். போலீசார் விரட்டிச்சென்று பிடிக்க முயன்றும், அவர் அங்கிருந்து தலைமறைவாகி விட்டார். இதையடுத்து விற்பனைக்காக வைத்திருந்த 19 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்த போலீசார் தப்பியோடிய ராமலிங்கத்தை வலைவீசி தேடி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com