தி.மு.க. முப்பெரும் விழாவில் விருது பெறுவோர் பட்டியல்: கட்சி தலைமை அறிவிப்பு

பெரியார் விருது தி.மு.க. விவசாய அணி துணை செயலாளர் கு.செல்லப்பாவுக்கு வழங்கப்பட உள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தி.மு.க. முப்பெரும் விழாவில் விருது பெறுவோர் பட்டியலை கட்சித் தலைமை அறிவித்துள்ளது.

முப்பெரும் விழா

தி.மு.க. சார்பில் ஆண்டுதோறும் பெரியார் பிறந்த நாள், அண்ணா பிறந்த நாள், கட்சி தொடங்கப்பட்ட நாள் ஆகிய 3 முக்கிய நிகழ்வுகளையும் இணைத்து தி.மு.க. முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இந்த ஆண்டு (2026) தி.மு.க. முப்பெரும் விழா வரும் 15-ந் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெற இருக்கிறது.

விருது பெறுவோர்

இந்நிலையில் இந்த விழாவில் விருது பெறுவோர் பட்டியலை தி.மு.க. தலைமை வெளியிட்டுள்ளது.

அதன்படி, பெரியார் விருது தி.மு.க. விவசாய அணி துணை செயலாளர் கு.செல்லப்பாவுக்கும், அண்ணா விருது சேலம் மத்திய மாவட்ட அவைத் தலைவர் ஜி.கே.சுபாஷூக்கும், கலைஞர் விருது கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் திருச்சி சிவா எம்.பி.க்கும், பாவேந்தர் விருது கட்சியின் மருத்துவ அணித் தலைவர் கனிமொழி என்.வி.என்.சோமுவுக்கும், பேராசிரியர் விருது தலைமை செயற்குழு உறுப்பினர் மிசா எஸ்.அகமது தம்பிக்கும், மு.க.ஸ்டாலின் விருது இளைஞர் அணி துணைச் செயலாளர் நா.இளையராஜாவுக்கும் வழங்கப்பட இருக்கிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com