பாம்பு கடித்து சிறுமி பலி

விராலிமலையில் பாம்பு கடித்து சிறுமி பலியானார்.
பாம்பு கடித்து சிறுமி பலி
Published on

விராலிமலை அருகே உள்ள செரளப்பட்டியை சேர்ந்தவர் சக்திவேல். இவருடைய மகள் கவிப்ரியா (வயது 7). இவர் திருச்சி மணப்பாறையில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கி கொண்டிக்கும் போது திடீரென்று எழுந்த சிறுமி தனக்கு மயக்கம் வருவதாக கூறியுள்ளார். இதையடுத்து விஷ ஜந்து ஏதோ ஒன்று தான் கடித்துள்ளது என்று உணர்ந்த பெற்றோர் சிறுமியை மீட்டு மணப்பாறை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் விஷப்பாம்பு கடித்ததை உறுதி செய்து உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்து மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அங்கு சிகிச்சை பெற்று வந்த கவிப்ரியா நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com