அரசு பள்ளி காலை உணவில் இறந்து கிடந்த பல்லி: உணவு சாப்பிட்ட 11 பேர் மருத்துவமனையில் அனுமதி

மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் பல்லி எவ்வாறு விழுந்தது, உணவு தயாரிக்கப்பட்ட விதம் உள்ளிட்டவை குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசுப் பள்ளி காலை உணவில் இறந்த பல்லி...சாப்பிட்ட 11 பேர் மருத்துவமனையில் அனுமதி
பல்லி
Published on

செங்கல்பட்டு,

அரசு பள்ளியில் காலை உணவில் பல்லி இறந்து கிடந்ததால், அந்த உணவை சாப்பிட்ட 11 மாணவ-மாணவிகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காலை உணவில் பல்லி

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே மேலக்கண்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுமார் 24 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் மாணவர்களுக்கு தினமும் காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இன்று மாணவர்களுக்கு காலை உணவாக சாம்பார் சாதம் மற்றும் உப்புமா வழங்கப்பட்டது. மாணவர்கள் உணவை சாப்பிட்டு கொண்டிருந்தபோது, வழங்கப்பட்ட உணவில் இறந்த நிலையில் பல்லி கிடந்ததாக கூறப்படுகிறது.

மருத்துவமனையில் அனுமதி

இதனை பார்த்த ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதற்கிடையில், காலை உணவு சாப்பிட்ட சில மாணவர்களுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து 9 மாணவிகள் மற்றும் 2 மாணவர்கள் என மொத்தம் 11 பேரை ஆசிரியர்கள் உடனடியாக அருகில் உள்ள பாலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு மாணவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மாணவர்களின் உடல்நிலை குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

விசாரணை

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த செங்கல்பட்டு தாலுகா காவல் நிலைய போலீசார் பள்ளிக்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் பல்லி எவ்வாறு விழுந்தது, உணவு தயாரிக்கப்பட்ட விதம் உள்ளிட்டவை குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com