அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகள் தொடங்க அரசாணை வெளியீடு

அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகள் தொடங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகள் தொடங்க அரசாணை வெளியீடு
Published on

சென்னை,

தமிழ்நாட்டில் உள்ள 2381 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் தொடங்குவதற்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

மேலும் சோதனை முயற்சியாக 2,381 அங்கன்வாடிகளில் 3 ஆண்டுகள் எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகள் செயல்படுத்தப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது பெற்றோர்கள் தனியார் பள்ளிகளில் உள்ள மழலையர் வகுப்புகளில் தங்கள் குழந்தைகளை சேர்த்து வருகின்றனர். இதனால் அங்கன்வாடி மையங்களில் நான்கு முதல் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் சேர்வது குறைந்து வருகிறது.

அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் அரசு நடுநிலைப் பள்ளிகளில் உள்ள அங்கன்வாடிகளில் ஜனவரி முதல் இந்த வகுப்புகள் துவங்க ஏற்பாடு நடக்கிறது.

இதன்மூலம் தமிழகத்தில் உள்ள 2,381 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி., யுகேஜி வகுப்புகள் துவங்க உள்ளது. இதற்கான வரும் கல்வி ஆண்டில் ரூ.7.73 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com