19 திருநங்கைகளுக்கு ரூ.9 லட்சம் கடன் உதவி

சுயதொழில் தொடங்க 19 திருநங்கைகளுக்கு ரூ.9 லட்சம் கடன் உதவியை கலெக்டர் வழங்கினார்.
19 திருநங்கைகளுக்கு ரூ.9 லட்சம் கடன் உதவி
Published on

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் திருநங்கைகள் தொழில் தொடங்கிட ஏதுவாக கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமை தாங்கி 19 திருநங்கைகளுக்கு ரூ.9 லட்சத்து 37 ஆயிரத்து 544 கடன் உதவிகளை வழங்கினார். பின்னர் சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் எந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ 41 நபர்களுக்கு தையல் எந்திரத்தையும் கலெக்டர் வழங்கினார்.

அப்போது கலெக்டர் பேசுகையில் திருநங்கைகள் அரசு வழங்கியுள்ள இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்தி தங்களது வாழ்க்கை தரத்தையும், வருமானத்தையும் உயர்த்திக் கொள்ள வேண்டும். அடுத்தவர்களுக்கு இடையூறாக இருக்கக் கூடாது. திருநங்கைகள் தங்களது குறைகளை எப்போதும் தெரிவிக்கலாம். படித்த திருநங்கைகள் யாராவது இருந்தால் தகுதியான வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். இதில் மாவட்ட சமூக நல அலுவலர் ஸ்டெல்லா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com