மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறு-குறு வணிகர்களுக்கு கடன் வழங்கப்படும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

இந்த திட்டத்தின் மூலம் சுமார் 3 ஆயிரத்து 300 சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயனடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறு-குறு வணிகர்களுக்கு கடன் வழங்கப்படும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
Published on

சென்னை,

தமிழகம் வரலாறு காணாத மழைப்பொழிவை இந்த மாதம் சந்தித்தது. முதலில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும், பின்னர் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களிலும் அதி கனமழை பெய்தது. இதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறு, குறு வணிகர்கள் மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடன் உதவி வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் சிறு வணிகர்கள், சிறு கடை உரிமையாளர்கள், தெருவோர வியாபாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் வரை 4 சதவீத வட்டி, ரூ.1 லட்சம் வரை 6 சதவீத வட்டி வீதத்தில் கடன் வழங்கப்படும். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும்.

மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.3 லட்சம் வரை வெள்ள நிவாரண கடனுதவித் திட்டம். ஆண்டுக்கு 6% சிறப்பு சலுகை வட்டி விகிதத்தில் கடனுதவி வழங்கப்படும். இக்கடனை தொழில் நிறுவனங்கள் 3 மாத கால அவகாசத்துடன் 18 மாத தவணைகளில் திருப்பிச் செலுத்தலாம். இத்திட்டத்தின் மூலம் சுமார் 3 ஆயிரத்து 300 சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயனடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com