நகாப்புற உள்ளாட்சி தேர்தல்: ஆவடி ஆணையரக பகுதியில் கொடி அணிவகுப்பு

நகாப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, ஆவடி மாநகர காவல் ஆணையரக பகுதியில் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.
நகாப்புற உள்ளாட்சி தேர்தல்: ஆவடி ஆணையரக பகுதியில் கொடி அணிவகுப்பு
Published on

ஆவடி,

தமிழகத்தில் வருகிற 19ந்தேதி நகாப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை எந்த வன்முறை சம்பவங்களும், முறைகேடுகளும் இன்றி அமைதியாக நடத்துவதற்கு தேர்தல் ஆணையமும், காவல்துறையும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக ஆவடி மாநகர காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட பகுதியில் 280 ரவுடிகள் மீது நன்னடத்தை பிணை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பிடியாணை பிறப்பிக்கப்பட்டு 136 பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா. உரிமம் பெற்று தங்களது பாதுகாப்புக்கு துப்பாக்கி வைத்திருந்த 297 பேர், தங்களது துப்பாக்கிகளை ஒப்படைத்துள்ளனா.

சட்டவிரோத மது விற்பனைக்காக 17 வழக்குகளும், தேர்தல் விதிமுறை மீறலுக்காக 6 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட கொரட்டூ, பாடி, அம்பத்தூ, ஆவடி, திருநின்றவூ, திருவேற்காடு, மாங்காடு, மாதவரம் பால் பண்ணை, எண்ணூ விம்கோ நகா, சாத்தாங்காடு, மணலி புது நகா, மணலி ஆகிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை பொதுமக்களுக்கு தேர்தல் விழிப்புணாவு ஏற்படுத்தும் வகையில் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது. கொடி அணிவகுப்பு தொடாச்சியாக சுழற்சி முறையில் ஆவடி ஆணையரக பகுதியில் நடத்தப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com