உள்ளாட்சித் தேர்தல்: அதிமுக-பாஜக பேச்சுவார்த்தை

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அதிமுக-பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
உள்ளாட்சித் தேர்தல்: அதிமுக-பாஜக பேச்சுவார்த்தை
Published on

சென்னை,

தமிழகத்தில் அடுத்த மாதம் (அக்டோபர்) 6, 9-ந்தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. அக்டோபர் 12-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15-ந்தேதி தொடங்கியது.

இந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் போட்டியிடும் இடங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

அதிமுக சார்பில் தங்கமணி, நத்தம் விஸ்வநாதன், பாஜக சார்பில் கரு. நாகராஜன், கராத்தே தியாகராஜன், செங்கல்பட்டு மாவட்டத் தலைவர் பலராமன், பொதுக்குழு உறுப்பினர் வேத சுப்பிரமணியன் பங்கேற்றுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com