5-ந் தேதி உள்ளூர் விடுமுறை

தென்காசி மாவட்டத்திற்கு ஏப்ரல் மாதம் 5-ந் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட கலெக்டர் துரை.ரவிச்சந்திரன் அறிவித்துள்ளார்.
5-ந் தேதி உள்ளூர் விடுமுறை
Published on

தென்காசி மாவட்டத்திற்கு ஏப்ரல் மாதம் 5-ந் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட கலெக்டர் துரை.ரவிச்சந்திரன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பங்குனி உத்திர திருநாள்

பங்குனி உத்திர திருநாள் வருகிற ஏப்ரல் மாதம் 5-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு தென்காசி மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகளில் நடைபெற்று வரும் பொதுத்தேர்வுகள் மற்றும் முக்கிய தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது.

இந்த நாளில் அரசு பொதுத்தேர்வுகள் ஏதும் இருந்தால் பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்வு நடைபெறும் பள்ளிகள் மற்றும் பொதுத்தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறையானது பொருந்தாது.

பொதுத்தேர்வு நடைபெறும்

மேலும் உள்ளூர் விடுமுறை நாளன்று நடத்தப்படும் அரசு பொதுத்தேர்வுகள் அனைத்தும் எவ்வித மாறுதலும் இன்றி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறை, செலவாணி முறிச்சட்டம் 1881-ன் படி அறிவிக்கப்படவில்லை என்பதால் வங்கிகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது.

இம் மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்து சார் நிலை கருவூலங்களும் குறைந்தபட்ச பணியாளர்களைக் கொண்டு அரசு காப்புகள் தொடர்பாக அவசரப்பணிகளை கவனிப்பதற்காக செயல்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வருகிற ஏப்ரல் மாதம் 6-ந் தேதி (சனிக்கிழமை) அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.

கோடை விடுமுறையில் உள்ள கல்வி நிறுவன மாணவ - மாணவிகளுக்கு இவ்வேலை நாள் பொருந்தாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com