

தென்காசி,
கன்னியாகுமரி அய்யா வைகுண்டசாமியின் 194-ஆவது அவதாரத் திருவிழாயொட்டி தென்காசியில் மார்ச் 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். பொதுத்தேர்வு இருப்பின் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள், மாணவர்களுக்கு விடுமுறை கிடையாது என்றும் அறிவிப்பு தென்காசியில் மார்ச் 4ஆம் தேதி விடுமுறையை ஈடு செய்ய மார்ச் 7ஆம் தேதி வேலை நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுவாமி தோப்பு தலைமை பதியில் ஆண்டுதோறும் அய்யா வைகுண்ட சுவாமி அவதார நாள் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி போன்ற சுற்றியுள்ள மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் அங்க செல்வது வழக்கம். இதனை கருத்தில் கொண்டு ஆண்டுதோறும் சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டு வருகிறது.