புதுக்கோட்டை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை


புதுக்கோட்டை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை
x
தினத்தந்தி 6 April 2025 8:40 PM IST (Updated: 6 April 2025 9:29 PM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள நார்த்தாமலையில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் பங்குனி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடுவது வழக்கம்.

அதேபோல் இந்த ஆண்டுக்கான திருவிழாவையொட்டி கடந்த 23-ந்தேதி பூச்சொரிதல் நடைபெற்றது. அதனைதொடர்ந்து, 30-ந்தேதி காப்புகட்டுதல் மற்றும் கொடியேற்றம் நடந்தது. விழாவையொட்டி நாள்தோறும் மண்டகபடிதாரர்கள் சார்பில், மாலை வேளைகளில் அலங்கரிக்கப்பட்ட பல்வேறு வாகனங்களில் அம்மன் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இந்தநிலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுகட்ட வருகின்ற 19-ம் தேதி (சனிக்கிழமை) வேலைநாள் என்றும் சனிக்கிழமையை வேலை நாளாகக் கொண்ட அலுவலகங்களுக்கு 20-ம் தேதியான ஞாயிற்றுக்கிழமை வேலைநாள் என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

1 More update

Next Story