விருதுநகர் மாவட்டத்துக்கு 14-ந் தேதி உள்ளூர் விடுமுறை

விடுமுறை நாளை ஈடு செய்யும் பொருட்டு ஆகஸ்ட் 29-ந்தேதி சனிக்கிழமை அன்று பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.
விருதுநகர் மாவட்டத்துக்கு 14-ந் தேதி உள்ளூர் விடுமுறை
Published on

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம் வரும் 14-ந் தேதி நடைபெற இருப்பதால் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

உள்ளூர் விடுமுறை

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிலையங்களுக்கு திங்கள்கிழமை (ஆகஸ்ட் 14) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு ஆகஸ்ட் 29-ந் தேதி பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. பள்ளி, கல்லூரிகளில் ஏற்கெனவே தேர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தால் இந்த விடுமுறை அறிவிப்பு பொருந்தாது. தேர்வுகள் அறிவித்தபடி நடைபெறும். இந்த உள்ளூர் விடுமுறை நாள் செலாவணி முறிச்சட்டத்தின்கீழ் வராது என்பதால், வங்கிகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com