ஏப்.27 -ல் தஞ்சையில் உள்ளூர் விடுமுறை

தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் ஏப்.27 -ல் நடைபெற உள்ளது.

ஏப்.27 -ல் தஞ்சையில் உள்ளூர் விடுமுறை
Published on

தஞ்சை,

விடுமுறை என்றாலே பள்ளி கல்லூரி மாணவர்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான். அதுவும் தொடர் விடுமுறை வந்தால் சொல்லவே வேண்டாம். இந்நிலையில் அரசு பொது விடுமுறை தவிர்த்து கோவில் திருவிழாக்கள், மசூதி, தேவாலயம் போன்ற முக்கிய நிகழ்வுகளுக்கு அம்மாவட்ட கலெக்டர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டதை அடுத்து உள்ளூர் விடுமுறை அறிவிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். அன்றைய தினம் கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படும்.

இதனிடையே பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வு முடிந்து கோடை விடுமுறையில் இருக்கும் நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு ஏப்ரல் 27ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் பிரியங்கா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள அருள்மிகு பிரகதீஸ்வரர் திருக்கோவில் சித்திரை தேர்த்திருவிழாவினை முன்னிட்டு வரும் ஏப்ரல் 27 திங்கட்கிழமை அன்று, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த உள்ளூர் விடுமுறை நாளுக்கு பதிலாக மே 09 (சனிக்கிழமை) அன்று பணி நாளாக அறிவித்தும் மேற்படி நாளில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அனுமதித்தும் அரசு அலுவலகங்களும், கல்வி நிறுவனங்களும் இயங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com