விழுப்புரம் மாவட்டத்திற்கு வரும் 24-ந் தேதி உள்ளூர் விடுமுறை..!

விழுப்புரம் மாவட்டத்திற்கு வரும் 24-ந் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்திற்கு வரும் 24-ந் தேதி உள்ளூர் விடுமுறை..!
Published on

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோவிலில் வருகிற 24-ந்தேதி தேரேட்டம் நடைபெற உள்ளது. எனவே அன்று ஒரு நாள் மட்டும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.

மேற்படி தினத்தில் அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு விழுப்புரம் மாவட்ட கருவூல மும் மற்றும் அனைத்து சார்நிலைக் கருவூலகங்களும் குறைந்த பணியாளர்களைக் கொண்டு இயங்கும், மேலும் மாணவ-மாணவிகளுக்கு 24-ந்தேதி அன்று பள்ளி இறுதித் தேர்வுகள் நடைபெற தேதி நிர்ணயிக்கப்பட்டிருப்பின் அந்த தேர்வுகள் அன்றைய தேதியில் வழக்கம்போல் நடைபெறும்.

உள்ளூர் விடுமுறை 24-ந்தேதிக்கு பதிலாக 4.3.2023 (சனிக்கிழமை) அன்று அறிவிக்கப்பட்டுள்ள (சனிக்கிழமை) பணிநாள் ஆகும். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com