நெல்லையில் மார்ச் 4-ந்தேதி உள்ளூர் விடுமுறை

அய்யா வைகுண்டசாமியின் அவதாரத் திருவிழா மார்ச் 4-ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
நெல்லையில் மார்ச் 4-ந்தேதி உள்ளூர் விடுமுறை
Published on

நெல்லை,

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுவாமி தோப்பு தலைமை பதியில் ஆண்டுதோறும் அய்யா வைகுண்ட சுவாமி அவதார நாள் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி போன்ற சுற்றியுள்ள மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் அங்க செல்வது வழக்கம்.

அதேபோல, ஒவ்வொரு ஊர்களிலும் உள்ள வைகுண்ட சாமியின் திருத்தாங்கல் மற்றும் பதிகளில் சிறப்பு வழிபாடுகள், வாகன பவனி நடைபெறும். இதனை கருத்தில் கொண்டு ஆண்டுதோறும் குமரியை சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு அய்யா வைகுண்ட சுவாமி அவதார தினத்தன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டு வருகிறது.

அந்த வகையில், அய்யா வைகுண்டசாமியின் 194-ஆவது அவதாரத் திருவிழாயொட்டி நெல்லையில் மார்ச் 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். பொதுத்தேர்வு இருப்பின் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள், மாணவர்களுக்கு விடுமுறை கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக மார்ச் 14-ம் தேதி வேலை நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com