

சென்னை,
தமிழகத்தில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு 2 கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. முதல் கட்ட தேர்தல் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது.
இந்நிலையில் முதற்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நிலவரம் குறித்து மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவலின்படி,
முதற்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 42.47% வாக்குகள் பதிவாகி உள்ளது.
நாகை - 41.63%, தர்மபுரி - 35.91%, கடலூர் - 40.36%, திருவாரூர் - 48.71%, மதுரை - 46%, அரியலூர் - 34.21%, புதுக்கேட்டை - 48%, தூத்துக்குடி - 42.39%, நாமக்கல் - 50% திண்டுக்கல் - 43.24%, ராமநாதபுரம் - 43.01%, கேவை - 38.29%, கரூர் - 50.02%, திருப்பூர் - 41.36%, திருச்சி - 49.20%, திருவண்ணாமலை - 36.90%, பெரம்பலூர் - 44.43% வாக்குகள் பதிவாகி உள்ளது.
ஊரக உள்ளாட்சித்தேர்தலில் வாக்காளர்கள் ஆர்வமுடன் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.
91,975 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு முதற்கட்டமாக 45,336 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடந்து வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.