12-ந்தேதி மின்தடை ஏற்படும் இடங்கள்

12-ந்தேதி மின்தடை ஏற்படும் இடங்கள்
12-ந்தேதி மின்தடை ஏற்படும் இடங்கள்
Published on

நெல்லை கிராமப்புற மின் கோட்டத்துக்கு உட்பட்ட மானூர் துணை மின் நிலையங்களில் வருகிற 12-ந்தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே அங்கு இருந்து மின் வினியோகம் பெறும் மானூர், மாவடி, தெற்குபட்டி, களக்குடி, எட்டாங்குளம், கானார்பட்டி, பிள்ளையார்குளம், குறிச்சிகுளம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

அதே போல் வள்ளியூர் மின் கோட்டத்துக்கு உட்பட்ட களக்காடு, பணகுடி துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக களக்காடு பகுதிக்கு உட்பட்ட கோதைச்சேரி, சிங்கிகுளம், களக்காடு, காடுவெட்டி, வடமலைசமுத்திரம், கள்ளிகுளம், மீனவன்குளம், கருவேலன்குளம், கோவிலம்மாள்புரம் மற்றும் பக்கத்து கிராமங்கள், பணகுடி பகுதிக்கு உட்பட்ட பணகுடி, லெப்பை குடியிருப்பு, புஷ்பவனம், குமந்தான், காவல்கிணறு, சிவகாமிபுரம், தளவாய்புரம், பாம்பன்குளம், கலந்தப்பனை, கடம்பன்குளம் மற்றும் பக்கத்து கிராமங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

தென்காசி மின்கோட்டத்துக்கு உட்பட்ட மங்கம்மாள் சாலை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக தென்காசி புதிய பஸ்நிலையம், மங்கம்மாள் சாலை பகுதிகள், சக்திநகர், காளிதாசன் நகர், ஹவுசிங்போர்டு காலனி, கீழப்புலியூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

இந்த தகவல்களை மின்வினியோக செயற்பொறியாளர்கள் அலெக்சாண்டர் (நெல்லை நகர்புறம்), வளன்அரசு (வள்ளியூர்), கற்பகவிநாயகசுந்தரம் (தென்காசி) ஆகியோர் தெரிவித்து உள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com