இன்று மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்

நாகை மாவட்டத்தில் இன்று மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிப்பு
இன்று மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்
Published on

மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக நாகை உதவி செயற்பொறியாளர் நடேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாகை அர்பன் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், இந்த துணைமின் நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் கலெக்டர் அலுவலகம், அரசு ஆஸ்பத்திரி, நாகூர் தர்கா ஆகிய பகுதிகளுக்கும், வேளாங்கண்ணி துணை மின் நிலையத்திலிருந்து மின்வினியோகம் பெறும் வேளாங்கண்ணி நகரம், செருதூர், பரவை ஆகிய பகுதிகளுக்கும், வேட்டைக்காரனிருப்பு துணை மின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறும் திருப்பூண்டி, காமேஸ்வரம், விழுந்தமாவடி, வேட்டைக்காரனிருப்பு, புதுப்பள்ளி, கோவில்பத்து, வெள்ளப்பள்ளம், நாலுவேதபதி, தாமரைப்புலம் ஆகிய பகுதிகளுக்கு இன்று (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com