லாக் அப் மரணங்கள்: தவெகவினர் நாளை ஆர்ப்பாட்டம்


லாக் அப் மரணங்கள்: தவெகவினர் நாளை ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 12 July 2025 2:04 PM IST (Updated: 12 July 2025 3:44 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தவெக தலைவர் விஜயின் தலைமையில் நடைபெற உள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கடந்த நான்கு வருடங்களில் லாக்கப்பில் உயிரிழந்தவர்களுக்கு நீதி கேட்கும் வகையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை வைத்து, தமிழக வெற்றி கழகம் கட்சி சார்பில் நாளை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் சென்னை சிவானந்தா சாலையில் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நடைபெறுகிறது.

இதற்காக பனையூரில் உள்ள தமிழக வெற்றி கழகம் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு, லாக்கப் மரணங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். நாளை நடைபெற உள்ள போராட்டத்திற்கு போலீசார் தடை விதிக்கலாம் என எண்ணி முன்னதாகவே அவர்களை அலுவலகத்திற்கு வரவழைத்துள்ளனர்.

அதன்படி, காவல் நிலைய விசாரணைக்கு அழைத்துச் சென்று உயிரிழந்த செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த கோகுல் ஸ்ரீ குடும்பத்தினர், அயனாவரத்தைச் சேர்ந்த விக்னேஷ் குடும்பத்தினர், கொடுங்கையூரைச் சேர்ந்த அப்பு என்ற ராஜசேகர் குடும்பத்தினர், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த தங்கமணியின் குடும்பத்தினர், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சின்னதுரை குடும்பத்தார், தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த செந்தில் குடும்பத்தினர் ஆகியோர் அலுவலகத்திற்கு வந்துள்ளனர்.

1 More update

Next Story