ரெயிலை நிறுத்தி கேட்டை மூடிய லோகோ பைலட்: அலட்சியமாக இருந்த கேட் கீப்பர் பணியிடை நீக்கம்

ரெயில்வே கேட் மூடப்படாமல் இருந்ததை கண்ட லோகோ பைலட், ரெயிலை உடனடியாக நிறுத்தினார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டம் தண்டரை - திருக்கோவிலூர் இடையிலான சாலையில் ரெயில்வே கேட் உள்ளது. இந்த பகுதியை நாகர்கோவிலில் இருந்து கச்சிக்குடா செல்லும் ரெயில் கடக்க முற்பட்டது. அப்போது ரெயில்வே கேட் மூடப்படாமல் இருந்ததை லோகோ பைலட் கண்டார்.

இதைக்கண்டு சுதாரித்துக்கொண்ட லோகோ பைலட், ரெயிலை உடனடியாக நிறுத்தினார். இதையடுத்து தானே கீழே இறங்கிச்சென்று ரெயில்வே கேட்டை மூடினார். இதன் பின்னர் அவர் ரெயிலை இயக்கிச் சென்றார். ரெயில் வரும் நேரத்தில் கேட்டை மூடாமல் அலட்சியமாக செயல்பட்ட கேட் கீப்பர் மீது லோகோ பைலட் அளித்த புகாரின் அடிப்படையில், கேட் கீப்பர் ராமு தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com