தமிழகத்தில் மக்களவை தேர்தலை முதல் கட்டத்தில் நடத்த தேர்தல் ஆணையத்திடம் அ.தி.மு.க. கோரிக்கை

தமிழகத்தில் மக்களவை தேர்தலை முதல் கட்டத்தில் நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் அ.தி.மு.க. கடிதம் வழியே கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் மக்களவை தேர்தலை முதல் கட்டத்தில் நடத்த தேர்தல் ஆணையத்திடம் அ.தி.மு.க. கோரிக்கை
Published on

நாடாளுமன்றத்திற்கான மக்களவை தேர்தல் இந்த வருடம் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடத்தப்படும்பொழுது அது கோடை காலம் என்பதனால் பொதுமக்களுக்கு அதிக சிரமம் ஏற்படும்.

இதனை முன்னிட்டு தமிழகத்தில் மக்களவை தேர்தலை முதல் கட்டத்தில் நடத்த தேர்தல் ஆணையத்திடம் அ.தி.மு.க. கடிதம் எழுதியுள்ளது.

இதுபற்றி அக்கட்சியை சேர்ந்த மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் வேணுகோபால் எழுதியுள்ள கடிதத்தில் தேர்தல் நடைபெறக்கூடிய கோடை காலத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதால், தமிழகத்தில் தேர்தலை முதல் கட்டத்திலேயே நடத்துமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com