தமிழக செய்திகள்
தனித்தமிழறிஞர் பாவாணர் வாழ்க! - மு.க.ஸ்டாலின் பதிவு
தமிழின் தனித்தன்மையைப் பேணிக் காத்திட்டவர் பாவானர் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,
மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் பிறந்தநாளை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;
"தனித்தமிழ்க்கு வித்திட்டவர் பரிதிமாற் கலைஞர்; செடியாகத் தழைக்கச் செய்தவர் நிறைதமிழ் மலையாம் மறைமலையடிகள்; நானே மரமாக வளர்த்து வருகிறேன்" எனத் தம் தமிழ்ப்பணியை மதிப்பிட்டார் பாவாணர்.
செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டத்தைத் தம் வாழ்நாள் கடமையாக எண்ணி உழைத்தார். இந்திய மொழிகளிலேயே வேறு எம்மொழிக்கும் இல்லாத சிறப்பாகத் தமிழின் தனித்தன்மையைப் பேணிக் காத்திட்ட தனித்தமிழறிஞர் பாவாணர் வாழ்க!”
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

