

சென்னை,
சிங்காரச் சென்னை 2.0 தூய்மை பணி திட்டத்திற்காக ரூ.36.52 கோடி மதிப்பில் 1,684 பேட்டரி வாகனங்களை மாநகராட்சிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மேலும் மாநகராட்சி பணியின்போது உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுதாரர்கள் 195 பேருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி ஆணையை வழங்கினார்.
அதன் பிறகு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
மக்கள் பணியாற்றுவதுதான் மேயரின் பணி என்று செயல்பட்டேன். மக்கள் வாக்கை பெற்ற முதல் மேயராக பதவியேற்றன்.
ரிப்பன் மாளிகையை பார்க்கும்போது மேயராக இருந்தது ஞாபகம் வருகிறது. பல்வேறு வரலாற்று சிறப்புகளை கொண்டது ரிப்பன் மாளிகை. நான் ஏற்ற பொறுப்பை அமைச்சர் கே.என்.நேருவிடம் ஒப்படைத்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.