எ.வ.வேலுவின் மகனுக்கு எதிரான ‘லுக்அவுட் நோட்டீஸ்’ நிறுத்தி வைப்பு

ஏரியில் சட்டவிரோதமாக மண் எடுத்து சுமார் ரூ.8 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
எ.வ.வேலுவின் மகனுக்கு எதிரான ‘லுக்அவுட் நோட்டீஸ்’ நிறுத்தி வைப்பு
Published on: 

சென்னை,

திருவண்ணாமலை மாவட்டம், மலப்பம்பாடி ஏரியில் சட்டவிரோதமாக மண் எடுத்து, அரசுக்கு சுமார் ரூ.8 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, அவரது மகன் எ.வ.குமரன் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் எ.வ.குமரனுக்கு எதிராக 'லுக் அவுட் நோட்டீஸ்' பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் அவர் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, "மனுதாரர் சொந்த மாக ஆஸ்பத்திரி வைத்துள்ளார். சீனாவில் மருத்துவ சாதனங்கள் தொடர்பான கண்காட்சி நடைபெறுகிறது. அதில் கலந்து கொள்ள எ.வ.குமரன் வருகிற 20-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை சீனா செல்ல உள்ளார். அதனால், இந்த லுக் அவுட் நோட்டீசை ரத்து செய்யவேண்டும்.

இதற்காக அவரது மனைவியின் பாஸ் போர்ட்டை ஒப்படைக்கவும் தயாராக உள்ளார் என்று வாதிடப் பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, "மனுதாரர் சீனா செல்ல அனுமதி அளிக்கிறேன். அவருக்கு எதிரான 'லுக் அவுட் நோட்டீசை' வருகிற 20-ந்தேதி நள்ளிரவு முதல் 29-ந்தேதி நள்ளிரவு வரை நிறுத்தி வைக்கவேண்டும். எ.வ.குமரனின் மனைவி பாஸ் போர்ட்டை சென்னை ஐகோர்ட்டு தலைமை பதிவாளரிடம் மனுதாரர் ஒப்படைக்கவேண்டும். விசாரணையை நவம்பர் 6-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறேன்” என்று உத்தரவிட்டார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com